அன்றைய இந்திய பிரதமரின் திறமையால் எல்லையை மீற அண்டை நாடுகள் அஞ்சிய நேரம் அது என்று பாகிஸ்தானை இந்தியா வென்ற 1971 போர் வெற்றி குறித்து ராகுல் காந்தி ட்வீட்டரில் கூறியுள்ளார்.
பாகிஸ்தானை வென்ற 1971 போரின் 50-வது பொன்விழா தினத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆயுதப்படைகளின் வீரத்திற்கு தலைவணங்குவோம் என்றும் தனது ட்விட்டர் பதிவில் போரில் ஈடுபட்ட இந்திய ராணுவத்தினருக்கும் அவர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் போரின் 50வது பொன்விழா வெற்றி ஆண்டை இன்று முதல் கொண்டாடுகிறது. இதை முன்னிட்டு, நாடு முழுவதும் பல நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்தியா- பாகிஸ்தான் போர் பொன்விழா கொண்டாட்டம் தொடக்கத்தில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
1971 ஆம் ஆண்டு போரில் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்த பின்னர், பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஜெனரல் அமீர் அப்துல்லா கான் நியாசி, தனது 93,000 துருப்புக்களுடன், இந்திய ராணுவ வீரர்களையும் உள்ளடக்கிய நட்பு படைகளிடம் சரணடைந்தார்.
1971 போரில் இந்தியா, பாகிஸ்தானை இரண்டு துண்டுகளாகப் பிரித்தது. இது வங்கதேசம் உருவாக வழிவகுத்தது. இது இந்தியாவின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாகும். 1971 ல் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றியை நினைவுகூரும் விதமாக விஜய் திவாஸ் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16 அன்று கொண்டாடப்படுகிறது.
» இந்தியா- பாகிஸ்தான் போர் பொன்விழா கொண்டாட்டம் தொடக்கம்: போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
» ஐஐடி, ஐஐஎம், இஸ்ரோ உருவாக நேரு காரணம்: அசோக் கெலாட் பெருமிதம்
வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை நினைவுகூர்ந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:
''இந்திய பிரதமரின் திறமையால் அண்டை நாடுகள் நம் நாட்டின் எல்லைகளை மீற அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்த நேரத்தில் அது நடந்தது. 1971 ல் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வரலாற்று வெற்றியைக் கொண்டாடும் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கள்; நமது ஆயுதப்படைகளின் வீரத்திற்கு தலைவணங்குவோம்''
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
இந்த போர் நடந்தபோது இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago