திருப்பதி மலைகளில் இருந்து நவரத்தின கற்கள் கடத்தல்: தேவஸ்தானம், சுங்கத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

By என்.மகேஷ் குமார்

திருப்பதி மலைகளிலிருந்து விலை உயர்ந்த புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், பவளம் உள்ளிட்ட நவரத்தின கற்கள் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதைத் தடுக்க தேவஸ்தானம், சுங்கத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் குடி கொண்டுள்ள சேஷாசலம் வனப் பகுதியை உள்ளடக்கிய சப்த மலை கள் பல அரிய வகை பொருட் களை உள்ளடக்கியதாக உள்ளன. குறிப்பாக பல புண்ணிய தீர்த்தங் கள், 400-க்கும் மேற்பட்ட மூலிகை மரம், செடி, கொடி வகைகள், 42 அரிய வகை தங்க பல்லி, தேவாங்கு உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. மேலும் பல கோடி மதிப்புள்ள உயர்தர செம்மரங்களும் இங்கு உள்ளன.

இந்த மலைகளில் பச்சை மரகதம், மாணிக்கம், கோமேதகம், பவளம், புஷ்பராகம், கிரிஸ்டல் எனப்படும் உயர்ரக வெள்ளை கல் என 200-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த நவரத்தின கற்களும் இருப் பது இப்போது தெரியவந்துள்ளது. இதையடுத்து, வியாபாரிகள் இவற்றை சேகரித்து, பரிசோதித்துப் பார்த்ததில், இவை விலை உயர்ந்த கற்கள்தான் என தெரியவந்துள்ளது.

இதையடுத்து, இந்தக் கற்களை வியாபாரிகள் கடத்திச் சென்று பாலிஷ் செய்து தரகர்கள் மூலம் வெளி மாநிலங்களில் விற்று வரு கின்றனர். குறிப்பாக, மும்பை, புனே, சென்னை போன்ற நகரங் களில் விற்கப்படுவதாகவும் இதன் மூலம் கோடிக்கணக்கில் அவர்கள் லாபம் சம்பாதித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சேஷாசலம் வனப்பகுதிகளில் சிலரால் மட்டுமே இந்த வியாபாரம் நடைபெற்று வருவதாக மலைவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர். திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி மண்டலம் வாரி மெட்டு பகுதி கள் வழியாக பக்தர்களைப் போல வனப்பகுதிகளுக்கு சென்று, இந்த உயர்ரக கற்களை சேகரித்து செல்வ தாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சேஷாசலம் வனப்பகுதியில் 15 முதல் 25 இடங்களில் இந்த அரிய வகை நவரத்தினங்கள் கிடைப்ப தாக இப்பகுதி மக்கள் தெரிவிக் கின்றனர். வன விலங்குகள் அதிக அளவில் நடமாட்டம் உள்ள இந்தப் பகுதிகளில் யாரும் தனியாக செல்ல முடியாது. இதன் காரணமாக கடத்தல்காரர்கள் கும்பல் கும்பலாக செல்வதாகவும் கூறப்படுகிறது.

நவரத்தின கற்கள் அணிவதை சிலர் மூட நம்பிக்கை என்று சிலரும் அறிவியல் சார்ந்த விஷயம் என்றும் மேலும் சிலரும் கூறி வருகின்றனர். ஆனால் ஏராளமானோர் தங்களது ஜாதகப்படியும், பெயர் ராசிப்படி யும் இந்த கற்கள் பதித்த மோதிரம், டாலர்களை அணிந்து வருகின்றனர்.

சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து பல கோடி மதிப்புள்ள செம் மரங்கள் வெட்டி கடத்தப்படு கின்றன. இதைத் தடுக்க ஆந்திர அரசு பல நடவடிக்கைகளை மேற் கொண்டாலும், முற்றிலுமாக தடுக்க முடியவில்லை. இந்நிலையில் நவ ரத்தின கற்களும் கடத்தப்படுவதாக தகவல் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, திருமலை-திருப்பதி தேவஸ்தானம், மாநில சுங்கத் துறை, போலீஸார், வனத்துறையினர் கூட் டாக சேர்ந்து விலை உயர்ந்த நவ ரத்தின கற்கள் கடத்தலைத் தடுக்க நடவடிக்கை வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத் துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

30 mins ago

இந்தியா

34 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

மேலும்