ஐஐடி, ஐஐஎம், இஸ்ரோ உருவாக நேரு காரணம்: அசோக் கெலாட் பெருமிதம்

By பிடிஐ

இந்தியாவில் உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி உருவானதில் ஜவஹர்லால் நேருவின் பங்கு மகத்தானது என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் அமைந்துள்ள கோவிந்த் குரு பழங்குடியினர் பல்கலைக்கழகம் காணொலி மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் பேசிய முதல்வர் அசோக் கெஹ்லோட் கூறியதாவது:

டிஜிட்டல் புரட்சியின் விளைவாக தகவல் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியா கண்டுள்ள முன்னேற்றங்கள் அனைத்தும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பார்வை மற்றும் எண்ணங்களால் உருவானவைதான்.

ஐஐடி, ஐஐஎம், இஸ்ரோ போன்ற பிற நிறுவனங்கள் நேருவின் கண்ணோட்டத்தில் உருவானவை; நேருவின் காலத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தப்பட்டது, மேலும் நாட்டில் உயர்கல்விக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அவருக்குப் பிறகு, அடுத்தடுத்த காங்கிரஸ் அரசாங்கங்கள் அவரது பார்வையை முன்னெடுத்துச் சென்றன.

காங்கிரஸ் அரசாங்கங்கள் உயர் கல்வியில் கவனம் செலுத்தியதால் பல இந்திய மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் உலகளவில் புகழ் பெற்றுள்ளனர்.

ராஜஸ்தானில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி), இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி, தேசிய சட்ட பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்கள் அமைக்கப்பட்டதன் காரணத்தால் பஞ்சம் அல்லது வறட்சி ஏற்படவில்லை.

இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த வசுந்தரா ராஜே தலைமையிலான முன்னாள் பாஜக அரசு மாநிலத்தில் இரண்டு பல்கலைக்கழகங்களை மூடியது. நமது மாநிலத்தில் இதுபோன்ற ஒரு விஷயம் நடந்தது இதுவே முதல் முறையாகும்.

பிராந்தியத்தில் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாத மக்களிடையே நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதில் ஆக்கபூர்வமான பங்களிப்புகளைச் செயல்படுத்திட பல்கலைக்கழகம் முன்வர வேண்டும்.

இவ்வாறு அசோக் கெலாட் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்