டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தால் பஞ்சாப் உட்பட 3 மாநிலங்களுக்கு தினமும் ரூ. 3,500 கோடி நஷ்டம்

தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் காரணமாக பஞ்சாப், ஹரியாணா, இமாசலபிரதேச மாநில பொரு ளாதாரத்தில் தினசரி ரூ. 3 ஆயிரம் கோடி முதல் ரூ. 3,500 கோடி வரை நஷ்டம் ஏற்படுவதாக தொழில்துறை கூட்டமைப்பான அசோசேம் தெரி வித்துள்ளது.

சரக்குப் போக்குவரத்து முடங்கி யுள்ளது. பல பொருட்கள் தேங்கியுள் ளன. அதிக நேரமும் கூடுதல் தூர மும் சரக்கு லாரிகள் பயணிக்க வேண்டி யுள்ளது. பஞ்சாப், ஹரியாணா, இமாசலபிரதேச மாநிலங்களில் உள்ள கிடங்குகளிலிருந்து பொருட் களை எடுத்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது.

பஞ்சாப், ஹரியாணா, இமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் பாதிப்புக்குள்ளான ஒட்டுமொத்த பொருளாதாரம் ரூ. 18 லட்சம் கோடியாகும். ஜவுளி, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், விளையாட்டு பொருட்களின் ஏற்று மதி பாதிக்கப்பட்டுள்ளது.

பொருட்கள் தேக்கம்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டிய பொருட்களும் தேங்கியுள்ளதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அசோசேம் தலை வர் நிரஞ்சன் ஹிராநந்தானி தெரி வித்துள்ளார். சரக்குப் போக்கு வரத்துக் கட்டணம் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அத்துடன் தொழி லாளர்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுவதாகவும் சாலை மார்க்கமாக மட்டுமே செல்லும் ஜம்மு காஷ்மீர் இந்த போராட்டத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய தொழிலக கூட்டமைப்பின் வடக்குப் பிராந்திய தலைவர் நிகில் சஹானி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

32 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்