பருவநிலை மாற்றத்தைத் தடுக் கும் நோக்கில் செயல்பட்டு வரும்9 வயது சிறுமி லிசிபிரியா விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் லிசிபிரியா கூறியதாவது:
நாட்டில் விவசாயிகள் இல்லையென்றால் உணவும் இல்லை. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய குரல் இந்த உலகம் முழுவதும் சென்றடையும் என்று நம்புகிறேன்.விவசாயிகளுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் பருவநிலைமாற்றத்தைத் தடுக்கும் செயற் பாட்டாளர்கள் செயல்படுவார்கள்.
15 நாட்களாக கடும் பனியிலும் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளையும், அவர்களது குடும்பத்தாரையும் சிங்கு எல்லைப் பகுதியில் நான் சந்தித்தேன். அவர்களுடன் அமர்ந்து நான்உணவும் சாப்பிட்டேன். காற்றுமாசுவைத் தடுக்க வைக்கோல்களை எரிப்பதை விவசாயிகள் நிறுத்த வேண்டும் என்று நான்அப்போது அவர்களிடம் கேட்டுக்கொண்டேன். பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் விவசாயிகள்தான்.
அதிகப்படியான வெள்ளம், வறட்சி, புயல், சூறாவளி, வெட்டுக்கிளி போன்ற பல்வேறு பிரச்சினைகளால் அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு மேலும் கஷ்டத்தைக் கொடுக்க கூடாது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் உயிரிழக்கின்றனர். எனவே விவசாயிகளின் குரலையும், அவர்களது கோரிக்கைகளையும் நமது நாட்டுத் தலைவர்கள் கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago