27 மாநிலங்களுக்கு ரூ.9,880 கோடி கடன்: சுயசார்பு திட்டத்தில் வழங்க மத்திய அரசு முடிவு

சுயசார்பு பாரதம் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் 27 மாநிலங்களுக்கு ரூ.9,880 கோடி கடனாகவழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்தில் மத்திய அரசு தனது இரண்டாம் கட்ட நிதி ஊக்குவிப்பு திட்டங்களை அறிவித்தது. அதில் சுயசார்பு பாரதம் திட்டத்தின் செயல்பாடுகளுக்காக மாநிலங்களுக்கு ரூ.12,000 கோடி கடன் வழங்க உள்ளதாக அறிவித்தது. இந்த கடன் வட்டி இல்லாத 50 ஆண்டுகளுக்கான கடனாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

உ.பி.க்கு ரூ.750 கோடி

தற்போது இந்தத் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்காததால் தமிழகம் தவிர்த்து மற்ற 27 மாநிலங்களும் மத்திய அரசிடம் கடன் பெற உள்ளன. இந்த மாநிலங்களுக்கு மொத்தமாக ரூ.9,880 கோடி கடனாகவழங்கப்பட உள்ளதாக நிதி அமைச்சகம் கூறியுள்ளது. முதல்கட்ட கடன் வழங்கலில் அதிகபட்சமாக உத்தர பிரதேசம் ரூ.750 கோடி பெற உள்ளது. பிஹார் ரூ.421கோடியும், மத்தியப் பிரதேசம் ரூ.330 கோடியும் பெற உள்ளன.

இந்தக் கடன் உதவியானது மாநில அரசுகள் கரோனா காலத்தில் சந்தித்துள்ள வருவாய் நெருக்கடியைச் சமாளிக்கவும், தேவையான அரசு செலவினங்களை மேற்கொள்ளவும் வழங்கப்படுவதாக நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்