புதிய வேளாண் சட்டங்களுக்கு மணிப்பூர் முதல்வர் ஆதரவு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு மணிப்பூர் மாநில முதல்வர் என்.பைரேன் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மணிப்பூர் முதல்வர் என்.பைரேன் சிங் நேற்று கூறியதாவது:

நாட்டில் உள்ள விவசாயிகளின் நலனுக்காகவும், அவர்களது வளர்ச்சிக்காகவும் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு மணிப்பூர் அரசு முழுமையாக ஆதரவு ஆளிக்கிறது.

இதன்மூலம் வேளாண் துறைவளர்ச்சி அடையும். விவசாயி களின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப் பாகும். அனைத்து விளை பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்ந்து கிடைக்கும்.

மேலும் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே உள்ள இடைத்தரகர்கள், ஏஜென்டுகள் இருக்கமாட்டார்கள். இதனால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய கமிஷன் பிரச்சினை இனி விவசாயிகளுக்கு இருக்காது. விவசாயிகளின் வாழ்க்கை இனி சிறப்பாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

39 mins ago

இந்தியா

11 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்