மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற டெல்லியில் விவசாயிகள் கடந்த இரு வாரங்களுக்கு மேலாகப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து தேசிய அளவில் 700 மாவட்டங்களில் மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக கிராமங்களில் மக்களிடையே இந்த வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து விரிவாக விளக்கம் அளித்துப் பிரச்சாரம் செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி கடந்த 16 நாட்களாக டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுவரை 5 கட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.
வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றபின் அடுத்த பிரச்சினைகளை ஆலோசிக்கலாம் என்றும், வரும் 14-ம் தேதி முதல் போராட்டம் தீவிரமடையும் என்றும் விவசாயிகள் அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.
» மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து பாரதிய கிசான் யூனியன் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆளும் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளைத் தவிர்த்து பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றன.
இந்நிலையில், மத்திய அரசு தாங்கள் கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களின் பலன் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் பொதுக்கூட்டம், பத்திரிகையாளர் சந்திப்பு உள்ளிட்டவற்றை தேசிய அளவில் 700 மாவட்டங்களில் நடத்த முடிவு செய்துள்ளதாக பாஜக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், அரசியல் நலனுக்காகவும் எதிர்க்கட்சிகள் விவசாயிகளைத் தூண்டிவிடுகின்றன என்று பாஜக குற்றம் சாட்டுகிறது. இந்த வேளாண் சட்டங்கள் மூலம் இடைத்தரகர் இல்லாமல் வேளாண் பொருட்களை விவசாயிகள் விற்பனை செய்ய முடியும் என்று பாஜக வாதிடுகிறது.
ஆனால், விவசாய சங்கங்களும், எதிர்க்கட்சிகளும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் உள்ளன. விவசாயிகளின் நலனை அடகுவைத்து வேளாண் சந்தையைக் கைப்பற்றும் விதத்தில் இருக்கிறது எனக் குற்றம் சாட்டுகின்றன.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
இந்தியா
9 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago