இந்திய தொழில், வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் 93-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்திலும், வருடாந்திர மாநாட்டிலும், நாளை காலை 11 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடக்க உரையாற்றுகிறார்.
இந்திய தொழில், வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் வருடாந்திர மெய்நிகர் கண்காட்சி 2020-ஐயும் பிரதமர் திறந்து வைக்கிறார்.
2020 டிசம்பர் 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் இந்திய தொழில், வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் வருடாந்திர மாநாடு நடைபெறுகிறது. "ஊக்கம் பெற்ற இந்தியா" என்பதே இந்த வருட மாநாட்டின் மையக் கருவாகும். பல்வேறு அமைச்சர்கள், அதிகாரிகள், தொழில் துறை தலைவர்கள், தூதர்கள், சர்வதேச நிபுணர்கள், முன்னணி பிரமுகர்கள் ஆகியோர் இதில் கலந்து கொள்கிறார்கள்.
பொருளாதாரத்தின் மீது கோவிட்-19 ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்தும், அரசால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், இந்திய பொருளாதாரத்திற்கான வருங்கால பாதை குறித்தும் இந்த மாநாட்டின் போது பல்வேறு பங்குதாரர்கள் விவாதிப்பார்கள்.
இன்று தொடங்கும் இந்திய தொழில், வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் வருடாந்திர மெய்நிகர் கண்காட்சி 2020, ஒரு வருடத்திற்கு தொடரும். உலகெங்கிலும் உள்ள வர்த்தகர்கள் தங்களது பொருட்களை காட்சிப்படுத்தவும், வியாபார சாத்தியங்களை அதிகரித்துக் கொள்ளவும் இந்தக் கண்காட்சி உதவும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
இந்தியா
25 mins ago
இந்தியா
41 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
22 hours ago