குஜராத்தில் எந்தவித அனுமதியுமின்றி கோவிட் நோய்த் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளித்துவந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நரோடா பகுதியில் உள்ள ஆத்மியா மருத்துவமனையில் எந்தவொரு அனுமதியுமின்றி கோவிட் -19 சிகிச்சை அளிக்கப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து அகமதாபாத் மாநகராட்சிக் குழு புதன்கிழமை சோதனை மேற்கொண்டது. இங்கு 13 நோய்த் தொற்றாளர்கள் கோவிட் -19 சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆய்வுக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
''ஆத்மியா மருத்துவமனையில் கோவிட் சிகிச்சைக்கான எந்தவித அனுமதியும் பெறப்படவில்லை. அது மட்டுமின்றி நோய்த்தொற்றைக் கண்டறிய ஆர்டி-பி.சி.ஆர் அல்லது ஆன்டிஜென் சோதனைகளை மேற்கொள்ளாமல் கோவிட் நடைமுறை அல்லாத வேறு முறைகளைக் கையாண்டதும் தெரியவந்தது.
» இந்தியாவின் கோவிட் பரிசோதனை 15 கோடியை கடந்தது: 10 நாளில் 1 கோடி பேருக்கு பரிசோதனை
» நாடாளுமன்ற புதிய கட்டிடம்; அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
கணினிமயமாக்கப்பட்ட டோமோகிராபி (எச்.ஆர்.சி.டி) ஸ்கேன்களின் அடிப்படையில் நோயாளிகளைக் கண்டறிவது மற்றும் ஸ்கேன் முடிவுகளின் அடிப்படையில் கோவிட் -19 சிகிச்சைக்காக அவர்களை அனுமதித்தது போன்ற முறைகளை இம்மருத்துவமனை பின்பற்றியுள்ளது.
சிகிச்சை ஆவணங்களைப் பரிசோதித்துப் பார்த்தபோது, கோவிட்-19 சிகிச்சையின் ஒரு பகுதியாக அவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டது கண்டறியப்பட்டது. இங்கு 13 நோய்த் தொற்றாளர்கள் கோவிட் -19 சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. நோய்த் தொற்றாளர்கள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. விரைவில் இம்மருத்துவமனை நிர்வாகம் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும்''.
இவ்வாறு ஆய்வுக்குழுவினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
19 mins ago
இந்தியா
45 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago