விவசாயிகளின் போராட்டம் என்பது இந்தியாவின் ஜனநாயக மாண்பைக் காப்பதற்கான இயக்கமாகும் என்று சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் 15-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடந்து வருகிறது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி இன்று (8-ம் தேதி) விவசாயிகள் பாரத் பந்த் அதாவது நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடந்தது. மத்திய அரசுடன் நடந்த 5 சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலும் உடன்பாடு ஏற்படாத நிலையில் விவசாயிகள் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.
உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரி வருகிறார். வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கடந்த திங்கள் அன்று உத்தரப்பிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தில் டிராக்டர் பேரணி நடத்த முயன்றார். அகிலேஷ் யாதவை கட்சி அலுவலகத்துக்குச் செல்லவிடாமல் போலீஸார் தடுத்ததால், அவர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அகிலேஷ் யாதவை போலீஸார் கைது செய்தனர்.
விவசாயிகள் போராட்டம் குறித்து அகிலேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
» உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டேயின் தாயாரிடம் ரூ.2.50 கோடி ஏமாற்றிய உதவியாளர் கைது
"விவசாயிகளின் போராட்டம் என்பது இந்தியாவின் ஜனநாயக மாண்பை மீட்டெடுப்பதற்கான ஒரு இயக்கமாகும். மேலும் அரசாங்கத்தின் அனைத்து முடிவுகளிலும் பொது மக்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்; தங்கள் விருப்பங்களை மக்கள்மீது திணிக்க விடக்கூடாது.
இந்தியாவில் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான விவசாயிகளின் போராட்டத்துடன் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உணர்வுபூர்வமாக இணைவதற்கு இதுவே காரணம்.
இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
19 mins ago
இந்தியா
45 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago