உலகம் முழுவதும் நடைபெறும் சைபர் குற்றங்களால் ஏற்படும் இழப்பு ஒரு லட்சம் கோடி டாலர் என்று மென்பொருளுக்கு ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் உருவாக்கும் மெக்கஃபே நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுவாக கம்ப்யூட்டரில் எத்தகயை தகவல்களை பதிவிறக்கம் செய்தாலும் அதன் மூலமாக வைரஸ் பரவி கம்ப்யூட்டர் தகவலை அழித்துவிடும். இதிலிருந்து பாதுகாக்க பல்வேறு வகையான ஆன்டி வைரஸ் சாப்ட்வேர்கள் உருவாக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் இத்தகைய ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் உருவாக்குவதில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அதில் மெக்கஃபே நிறுவனம் சர்வதேச அளவில் பிரபலமானதாகும்..
சைபர் குற்றங்களால் 2020-ம் ஆண்டில் ஏற்படும் இழப்பு ஒரு லட்சம் கோடி டாலர் அளவுக்கு இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. இது உலகம் முழுவதின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தித் திறனில் ஒரு சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இது 2018-ம் ஆண்டில் ஏற்பட்ட இழப்பு 60,000 கோடி டாலராகும். இந்த ஆண்டில் சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக உலகம் முழுவதும் செலவிடும் தொகை 14,500 லட்சம் கோடி டாலராக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் மூன்றில் 2 நிறுவனங்கள், சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன. நிறுவனங்களில் தகவல்களை திருடுவது, காப்புரிமைகளை திருடுவது மற்றும் வைரஸை செலுத்தி தகவல்களை அழிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 75 சதவீத நிறுவனங்களுக்கு தகவல் திருட்டு மிகப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள 1,500-க்கும் அதிகமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். இதனால் 5,00,000 டாலர் அளவுக்கு இழப்பு ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளதையும் மெக்கஃபே
குறிப்பிட்டுள்ளது. சராசரியாக ஆண்டுக்கு 18 மணி நேர அளவு பணி இடையூறு இதுபோன்ற வைரஸ் தாக்குதல், குறுக்கீடுகளால் ஏற்
படுவதாக தெரிகிறது. இதில் சைபர் தாக்குதலும் அடங்கும். இதில் பாதிக்கும் மேலான நிறுவனங்கள் சைபர் தாக்குதலை எதிர்கொள்ள போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இதுவும் இழப்பு அதிகரிப்புக்கு முக்கியக் காரணம் என்றும் மெக்கஃபே தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago