இந்தியாவில் மொத்த கரோனா பரிசோதனை எண்ணிக்கை 14,77,87,656 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 32,981 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 96,77,203 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 391 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,40,573 ஆக உயர்ந்துள்ளது. இதில் 79.05 சதவீதத்தினர் 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.
நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் ஒரு மில்லியன் பேரில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இது உலக அளவில் பதிவான குறைவான எண்ணிக்கைகளுள் ஒன்று.
» சகோதரர் சத்யநாராயணாவை சந்தித்து ஆசி பெற்றார் நடிகர் ரஜினிகாந்த்
» ஆக்ரா மெட்ரோ ரயில் திட்ட கட்டுமான பணி: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
கடந்த 24 மணிநேரத்தில் 39,109 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 91,39,901 ஆக பதிவாகியுள்ளது.
தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் மொத்த எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை தற்போது 3,96,729 ஆக உள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவில் ஒரு மில்லியன் பேரில் 186 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டிருப்பது உலகில் மிகக் குறைந்த அளவாகும்.
நேற்று ஒரே நாளில் 8,01,081 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பரிசோதனைகள் எண்ணிக்கை 14,77,87,656 ஆக அதிகரித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago