டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு இனிப்புகள்; சிற்றுண்டிகள் அனுப்புவதற்கான பணிகளில் பஞ்சாப் கிராமம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. போராட்டம் முடியும் வரை தொடர்ந்து அனுப்பவும் அந்த கிராமம் ஆர்வம் காட்டி வருகிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி சலோ என்ற பெயரில் ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்கள் உள்பட பல்வேறு மாநில விவசாயிகள், விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுவரை விவசாயிகள், மத்திய அரசுக்கு இடையே 5 சுற்றுப் பேச்சு முடிந்தபோதிலும், எந்தவிதமான சுமூகமான தீர்வும் எட்டப்படவில்லை. போராட்டம் 10-வது நாளை எட்டியுள்ள நிலையில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி வரும் 8-ம் தேதி விவசாயிகள் பாரத் பந்த் அதாவது நாடுமுழுவதும் வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளனர்.
இதற்கு நாட்டின் தி.முக., காங்கிரஸ், ஆம் ஆத்மி, டி.ஆர்.எஸ் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
தங்கள் வீடுகளை உறவினர்களைப் பிரிந்து கடுங்குளிரில் போராடி வரும் விவசாயிகளுக்கு உற்சாகம் தரும் வகையில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கிராமம் ஒன்று இனிப்புகளையும் சிற்றுண்டிகளையும் தயாரித்து வருகிறது.
லூதியானா மாவட்டத்தைச் பேடோவல் கிராமம் முழுவதிலும், ஆண்கள், பெண்கள் மற்றும் சிறு குழுக்களில் உள்ள குழந்தைகள் தித்திப்பான பின்னிகள் உருட்டவும், அட்டைப் பெட்டிகளில் நிரப்புவதிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து இதற்கான ஏற்பாடுகளை செய்துவரும் நிரங்கரி சங்கத்தின் லக்பீர் சிங் பட்வால் கூறியதாவது:
"படோவல் கிராமத்தில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு தூய பசு நெய்யில் தயாரிக்கப்பட்ட கோயா பின்னி இனிப்புப் பலகாரத்தையும் நம்கீன் மெட்ரிஸ் சிற்றுண்டியையும் அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.
"விவசாயிகளின் பிரச்சினையை விரைவில் தீர்க்குமாறு நான் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன். எல்லையில் உள்ள விவசாயிகளுக்கு சுமார் மூன்று குவிண்டால் இனிப்புகள் மற்றும் நாம்கீன்களை டெம்போக்களில் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். போராட்டத்தில் வயதானவர்களும் குழந்தைகளும் உள்ளனர், இந்த குளிர்காலங்களில் அவர்கள் பசி உணர மாட்டார்கள் எனினும் அவர்கள் ஒழுங்காக சாப்பிட வேண்டும்.
ஒவ்வொரு பிளாஸ்டிக் பாக்கெட்டிலும் லட்டு மற்றும் மெட்ரி ஒவ்வொன்றும் இரண்டு துண்டுகள் உள்ளன. இவை கிராமத்தின் வீடுகளிலேயே செய்யப்படுகின்றன. ஆர்ப்பாட்டங்கள் முடியும் வரை நாங்கள் தொடர்ந்து விவசாயிகளுக்கு உணவளிப்போம்.
பஞ்சாபில் உள்ள கிராமங்களில் உள்ள மக்கள் தங்கள் சொந்த செல்வில் இங்த பங்களிப்புகளை செய்கிறார்கள் . அண்டை கிராமமான ஹோஷியார்பூரிலிருந்து பாதாம் பருப்பு 100 கிலோ கிராம் அளவுக்கு போராடும் விவசாயிகளுக்கு அனுப்பப்படுகிறது.
டெல்லியின் ஏழு எல்லைகளிலும் இனிப்புகள் மற்றும் நம்கீன் பாக்கெட்டுகள் விவசாயிகளுக்கு சென்றடைவதை உறுதிசெய்ய முயற்சிப்போம்
இவ்வாறு லக்பீர் சிங் பட்வால் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago