‘‘ஒடுக்கப்பட்டோரின் நல்வாழ்விற்காக உறுதியுடன் செயல்படும் மோடி அரசு’’-  அம்பேத்கர் நினைவு தினத்தின் அமித் ஷா மரியாதை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாபரிநிர்வாண் தினத்தை முன்னிட்டு பாரதரத்னா பாபாசாகேப் டாக்டர் பி ஆர் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிதாமகரும் சட்டமேதையுமான பி.ஆர்.அம்பேத்கர் 1956ல் காலமானார். அம்பேத்கரின் 64வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மறைந்த சட்ட மேதை நினைவுதினத்தில் இன்று நாட்டில் பல்வேறு தலைவர்களும் தனது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியுள்ளதாவது:

“தேசத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு வளர்ச்சி, வளம் மற்றும் சமத்துவத்தை வளர்க்கும் நோக்கத்தில் அனைத்தையும் உள்ளடக்கிய அரசியலமைப்பை வடிவமைத்த பாபாசாகேப் அவர்களை மகாபரிநிர்வாண் தினத்தன்று நான் வணங்குகிறேன்.

பாபாசாகேப் அவர்களின் காலடி தடத்தைப் பின்பற்றி, பல தசாப்தங்களாக வளர்ச்சித் திட்டங்கள் சென்றடையாத ஒடுக்கப்பட்ட பிரிவினரின் நல்வாழ்விற்காக மோடி தலைமையிலான அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது”, என்று அமித் ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE