தெலங்கானாவில் 2023-ம் ஆண்டு பாஜக ஆட்சியமைப்பதை சந்திரசேகர் ராவோ, ஒவைசியோ தடுக்க முடியாது என மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி கூறியுள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் கடந்த 1-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பாஜக, காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம் கட்சி ஆகியவை தீவிரமாகப் பிரச்சாரம் செய்தன.
ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் மிகப்பெரிய கவுரவத் தேர்தலாகப் பார்க்கப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. மொத்தம் 30 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்பட்டன.
மொத்தமுள்ள 150 இடங்களில் 149 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிஆர்எஸ் 55 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது. இருப்பினும் பெரும்பான்மைக்கு தேவையான 75 இடங்களை பெற முடியாத சூழலில் அக்கட்சி உள்ளது.
» பாஜகவினர் பலர் ரஜினியோடு தற்போது இணைந்துள்ளனர்: காங்கிரஸ் கருத்து
» 136 நாட்களுக்குப்பின் கோவிட் சிகிச்சை பெறுபவர்கள எண்ணிக்கை 4.10 லட்சத்துக்கும் கீழ் குறைவு
இரண்டாவது இடத்தில் பாஜக 48 இடங்களிலும், ஒவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 44 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
பாஜக வெற்றி குறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி கூறியதாவது:
‘‘ஹைதராபாத் என்பது மினி தெலங்கானா ஆகும். ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் மக்கள் ஆதரவுடன் 48 இடங்களில் வென்றுள்ளோம். அசாதுதீன் ஒவைசிக்கு எதிராக மக்கள் உள்ளனர். சந்திரசேகர் ராவோ, ஒவைசியோ பாஜக 2023-ம் ஆண்டு ஆட்சியமைப்பதை தடுக்க முடியாது. ’’ எனக் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago