ராமர் கோயில் அறக்கட்டளையில் நிதி மோசடி: அயோத்தி சாது ராம்விலாஸ் வேதாந்தி புகார்

By ஆர்.ஷபிமுன்னா


ராமர் கோயில் அறக்கடளையில் நிதி மோசடி நடைபெறுவதாக அயோத்தி சாதுவான ராம்விலாஸ் வேதாந்தி புகார் கூறி உள்ளார். இதன் மீது பாஜகவின் முன்னாள் எம்.பியான இவர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

பாஜகவின் முன்னாள் எம்.பி.யாக இருந்தவர் அயோத்தி சாதுவான ராம்விலாஸ் வேதாந்தி. இவர், ராமர் கோயில் போராட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத்துடன் இணைந்து செயல்பட்டவர்.

அயோத்தி மீதான உச்ச நீதிமன்ற வழக்கிலும் இந்து தரப்பின் ஒரு மனுதாரராகவும் வேதாந்தி இருந்தார். கடந்த வருடம் நவம்பரில் உச்ச நீதிமன்ற மேலுமுறையீட்டின் தீர்ப்பு வெளியானது.

இதையடுத்து மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையில் தாம் உட்பட அயோத்தியில் சில சாதுக்களையும் சேர்க்கக் கோரி வந்தார். ஆனால், அதில் வேதாந்திக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் இடம் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், சாதுவான ராம்விலாஸ் வேதாந்தி, ராமர் கோயில் அறக்கட்டளையின் நிதியில் மோசடி நடப்பதாக புகார் எழுப்பியுள்ளார். இதன் மீது மத்திய உள்துறையின் பதிலை பொறுத்து தாம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதாகவும் அறிவித்துள்ளார்.

இது குறித்து வேதாந்தி கூறும்போது, ‘ராமர் கோயில் அறக்கட்டளையில் நடப்பவை அனைத்தும் சரியல்ல. இதன் தற்போதைய உறுப்பினர்கள் நிதி மோசடியில் இறங்கியுள்ளனர்.’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்த காரணத்திற்காகவே தனக்கு ராமர் கோயில் அறக்கட்டளையில் இடமளிக்கப்படவில்லை எனவும், விஎச்பியின் நிறுவனர் அசோக் சிங்கால் தமக்கு

ராமஜென்மபூனி அறக்கட்டளையில் பொறுப்பு அளித்திருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதே புகாரை, இதற்கு முன் நிர்வாணி அஹாடாவின் தலைவரான தரம் தாஸ், ராமர் கோயில் அறக்கட்டளை மீது கூறியிருந்தார். இவரும் அறக்கட்டளையில் சேர்க்கப்படாதவர்களில் ஓருவர்.

இது குறித்து ஸ்ரீராமர் கோயில் தீர்த்த ஷேத்ராவின் வட்டாரம் கூறும்போது, ‘மத்திய அரசு அமைத்த அறக்கட்டளையில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால், தொடர்ந்து இப்புகாரை கூறி வருகின்றனர்.’ எனத் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் ராமர் கோயில் அறக்கட்டளையில் கிளை குழுக்கள் அமைக்கப்பட்டால் தற்போது புகார் அளிப்பவர்களும் சேர்க்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்