நாட்டில் உள்ள 128 நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பை மத்திய நீர் ஆணையம் வாரமொரு முறை கண்காணித்து வருகிறது. இதில் 44 நீர்த்தேக்கங்களில் 60 மெகாவாட்டுக்கும் அதிக திறனுள்ள ஹைட்ரோ மின்சக்தி உற்பத்தித் திறன் நிறுவப்பட்டுள்ளது.
இந்த 128 நீர்த்தேக்கங்களின் தற்போதைய மொத்த நீர் கொள்ளளவு 257.812 பி சி எம் ஆகும். தற்போதைய நிலவரப்படி, இந்த நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் இருப்பு 172.132 பி சி எம் ஆகும். இது மொத்த கொள்ளளவில் 66.77 சதவீதம் ஆகும்.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் இருப்பு 146.24 பி சி எம் ஆகும். கடந்த 10 ஆண்டுகளின் மொத்த நீர் இருப்பு சராசரி 114.439 பி சி எம் ஆகும்.
தெற்கு பிராந்தியத்தில் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஆந்திரா மற்றும் தெலங்கானா (இரு மாநிலங்களிலும் ஒருங்கிணைந்த இரு திட்டங்கள்) கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அடங்கும். மத்திய நீர்வள ஆணையத்தின் கண்காணிப்பில் வரும் 36 நீர் தேக்கங்களின், மொத்த நேரடி சேமிப்பு திறன் 52.81 பி சி எம் ஆகும்.
» வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் அமைப்பின் பாரத் பந்த்திற்கு இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு
» ஆன்லைன் விளையாட்டுகள்: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்
இம்மாதம் 3-ஆம் தேதியிட்ட நீர்த்தேக்க சேமிப்பு அறிக்கையின்படி, இந்த நீர் தேக்கங்களில் உள்ள மொத்த நேரடி சேமிப்பு 43.28 பி சி எம் ஆகும். இது, இந்த நீர்தேகங்களின் மொத்த நேரடி சேமிப்புத் திறனில் 82 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நேரடி சேமிப்பு 83 சதவீதமாக இருந்தது. மேலும், கடந்த பத்து ஆண்டுகளில் இந்த நீர் தேக்கங்களில் சராசரி சேமிப்பு அளவு 61 சதவீதமாக இருந்தது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago