பொறுப்புகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை கரோனா கற்றுத் தந்துள்ளது: ஹர்ஷ் வர்தன் 

By செய்திப்பிரிவு

பொறுப்புகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை பெருந்தொற்று நமக்குக் கற்றுத் தந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், ஸ்வீடன் இந்தியா நினைவு வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்திய ஸ்வீடன் சுகாதார புதுமை மையம்-‘சுகாதார உரையாடல்’ என்னும் வருடாந்திர மாநாட்டை தொடங்கி வைத்து, அதற்குத் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், “கடந்த 10 மாதங்களாக கோவிட்-19 பெருந்தொற்றால் இந்த பூமியில் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து பேசாமல் எந்த சுகாதாரம் தொடர்பான கலந்துரையாடலும் நிறைவு பெறாது. சவால்களை எதிர்கொள்வதற்கு பொறுப்புகளையும் நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை இந்தப் பெருந்தொற்று நமக்குக் கற்றுத் தந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் உலக நாடுகளுடன் இணைந்து நாம் செயல்பட வேண்டும். இதை கருத்தில் கொண்டே இருநாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாடுகளின் பிரதமர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்”, என்று கூறினார்.

இந்திய ஸ்வீடன் சுகாதார புதுமை மையம், ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தலைசிறந்த புற்றுநோய் மையத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

மேலும்