காஷ்மீரைத் தவறாகக் காட்டும் வரைபடம்: விக்கிபீடியா தளத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை

By பிடிஐ

காஷ்மீரைத் தவறாகக் காட்டும் வரைபடத்தை வெளியிட்டமைக்காக விக்கிபீடியா இணையதளத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்திய அரசின் 2000ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 69 ஏ-இன்கீழ் இதற்கான எச்சரிக்கை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்த விவகாரம் சமீபத்தில் ஒரு ட்விட்டர் பயனரால் சுட்டிக்காட்டப்பட்டது. அவர் இந்தியா-பூடான் உறவு பற்றிய விக்கிபீடியா பக்கம் ஜம்மு காஷ்மீரின் வரைபடத்தைத் தவறாகச் சித்தரித்திருப்பதை எடுத்துரைத்து, நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த விவகாரத்தைத் தானாக எடுத்துக்கொண்டு இதற்கான விசாரணையை மேற்கொண்டது.

இதுகுறிதது அமைச்சகம் விக்கிபீடியாவிற்கு அனுப்பியுள்ள எச்சரிக்கை நோட்டீஸில் கூறியுள்ளதாவது:

''காஷ்மீரைத் தவறாகச் சித்தரிக்கும் வரைபடத்தை தங்கள் இணையதளம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் விக்கிபீடியா இணையதளம் இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் மீறியுள்ளது. பிரச்சினைக்குரிய குறிப்பிட்ட பக்கத்தில் காஷ்மீரின் தவறான படத்தை அகற்றுங்கள். மாற்றங்களை உடனடியாகச் செய்யாவிட்டால், முழு தளத்தையும் முடக்குவது உட்பட, தங்கள் நிறுவனத்திற்கு எதிராக இந்திய அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்''.

இவ்வாறு மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்