பேஸ்புக் மூலம் மகனை கண்டுபிடித்த தாய்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் ரமாதேவிசவுத்ரி. இவரது மகன் மித்ரஜித். இவர் 15 ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவர் சவுத்ரியுடன் சண்டையிட்டு விட்டு பிரிந்துசென்றார். அப்போது அவரது மகன் மித்ரஜித்துக்கு வயது 7 மட்டுமே.

மேற்கு வங்கத்திலிருந்து டெல்லிக்கு வந்த ரமாதேவி, வழக்கறிஞர் படிப்பு படித்திருந்ததால் அந்தத் தொழிலைத் தொடங்கினார். பாட்டியாலா பார் கவுன்சிலில் கிரிமினல் வழக்கறிஞராக தனது பெயரைப் பதிவு செய்து வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார்.

ஆனால் 2012-ம் ஆண்டில் அவருக்கு ஷிசோபெரனியா என்ற மனநோயால் பாதிக்கப்பட்டு தான் யார் என்பதையேமறந்துவிட்டார். இதையடுத்துஅவர் டெல்லியிலுள்ள அரசு சாராஅமைப்பான ரஹாப் சென்டர்பார் ஹோப் என்ற என்ஜிஓவுக்கு மாற்றப்பட்டார். இந்த அமைப்பானது பெண்கள் நலனுக்காக செயல்பட்டு வருகிறது.அந்த காப்பகத்தில் 5 ஆண்டுகள் தங்கிய நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. பின்னர் அவர் எழுதவும், பிடிக்கவும் தொடங்கினார்.

அப்போதுதான் தனது குடும்பம், மகன் போன்ற விவரங்களை காப்பக நிர்வாகிகளிடம் தெரிவித்தார். பின்னர் தனது மகன் பெயர் மித்ரஜித் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து ரஹாப் என்ஜிஓ-வின் நிறுவனர் யூனிஸ் ஸ்டீபன் ரமாதேவியை அவரதுகுடும்பத்தாரிடம் சேர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். பேஸ்புக் மூலம் ரமாதேவியின் மகனை காப்பக நிர்வாகிகள் கண்டறிந்தனர். இதன்மூலம் 15ஆண்டுகளுக்குப் பின்னர் பேஸ்புக் மூலம் தாயும், மகனும் இணைந்துள்ளனர்.

இதுகுறித்து மித்ரஜித் கூறும்போது, “ஒருநாள் எனது செல்போனுக்கு உங்களுக்கு ரமாதேவி சவுத்ரி என்ற உறவினர் யாராவது உண்டா என்ற செய்தி வந்தது. அப்போது ஆம் என்று நான் பதில் அளித்தேன். அப்போதுதான் எனது தாய் உயிருடன் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். பின்னர்வீடியோ கால் மூலம் அம்மாவிடம் பேசினார். என்னால் அவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. திருமணபுகைப்படத்தில் இருந்த தாயின்தோற்றம் வேறு மாதிரியாகவும், வீடியோகாலில் நான் பேசிய தாயின் தோற்றம் வேறு மாதிரியாக இருந்ததால் என்னால் அடையாளம் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது” என்றார்.

பின்னர் கடந்த செப்டம்பரில் டெல்லிக்கு சென்று தாயுடன் இணைந்துள்ளார் மித்ரஜி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்