இந்தியாவிடம் இருந்து 30 ஆண்டுக்கு பிறகு அரிசி இறக்குமதி செய்ய சீனா முடிவு

By செய்திப்பிரிவு

இந்தியாவிடம் இருந்து அரிசிஇறக்குமதி செய்ய, 30 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா முடிவு செய்துள்ளது.

லடாக் எல்லையில் சீன வீரர்கள் ஊடுருவி தாக்குதல் நடத்திய பிறகு, அந்த நாட்டுக்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கைகள் எடுத்தது. சீன செயலிகள் தடை செய்யப்பட்டன. அந்நிய நேரடி முதலீடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிடம் இருந்து அரிசி கொள்முதல் செய்ய சீனா முடிவு செய்துள்ளது. சர்வதேச அளவில் அரிசிஏற்றுமதியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. அதேபோல் இறக்குமதியில் சீனா முதலிடம் வகிக்கிறது. ஆண்டுக்கு 40 லட்சம் டன் அளவுக்கு சீனா அரிசி இறக்குமதி செய்கிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிடம் இருந்தும் சீனா அரிசி இறக்குமதி செய்து வந்தது.

ஆனால், இந்திய அரிசியின் தரம் குறைவாக உள்ளதாகக் கூறி, இறக்குமதியை நிறுத்திவிட்டது. இந்நிலையில், இந்தியஅரிசி இறக்குமதியை சீனா தொடங்கி இருக்கிறது. சப்ளைகளில் கடும் கட்டுப்பாடு மற்றும்சலுகை விலையில் இந்தியா அரிசி வழங்குவதற்கு முடிவெடுத்துள்ளதால், அரிசி இறக்குமதி செய்து கொள்ள சீனாமுடிவெடுத்துள்ளது என்று இந்திய தொழிற்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அரிசி ஏற்றுமதி சங்கத் தலைவர் பி.வி.கிருஷ்ணா ராவ் கூறும்போது, ‘‘முதல் முறையாக இந்தியாவிடம் இருந்து சீனா அரிசி வாங்கிஉள்ளது. அதன் தரத்தைப் பார்த்த பிறகு அடுத்த ஆண்டுஅதிகமாக சீனா இறக்குமதி செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

டிசம்பர் மாதத்தில் இருந்து வரும் பிப்ரவரி மாதம் வரை ஒருலட்சம் டன் உடைத்த அரிசி(ஒரு டன் 300 டாலர் விலையில்)ஏற்றுமதி செய்ய வர்த்தகர்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர். தாய்லாந்து, வியட்நாம், மியான்மர், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் சீனாவுக்கு அரிசி சப்ளைசெய்கின்றன. தற்போது அரிசிஏற்றுமதிக்கு அந்த நாடுகள்கட்டுப்பாடுகள் கொண்டு வந்தது, இந்திய அரிசிக்கான விலையை விட ஒரு டன்னுக்கு30 டாலர் அதிகமாக நிர்ணயித்ததுபோன்றவற்றாலும், இந்தியா விடம் இருந்து சீனா அரிசி வாங்க முடிவெடுத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

19 mins ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்