மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை தடை செய்ய அவசர சட்டம்: மத்திய அரசுக்கு சிவசேனா கோரிக்கை

மகாராஷ்டிர மாநிலம் மும்பைதெற்கு மண்டல சிவசேனா பிரிவு தலைவரான பாண்டுரங்க சக்பால், முஸ்லிம் குழந்தைகளுக்காக, மசூதிகளில் தொழுகையின்போது ஓதும் பாடல் ஒப்பித்தல் போட்டியை (அசான்) ஆன்-ைலைனில் நடத்தலாம் என அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக சிவசேனாகட்சிப் பத்திரிகையான சாம்னாவில் நேற்று வெளிவந்துள்ள தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:

மசூதிகளில் ஒலிப்பெருக்கிகள் வைப்பதால் அது சுற்றுச்சூழல் பாதிப்பையும் ஒலி மாசுவையும் ஏற்படுத்துகிறது. இதைதடுக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். எனவே மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை வைக்க தடை செய்யும் வகையில் மத்தியஅரசு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்.

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்று பாஜகசொல்கிறது. அதேபோல்தான் அசான் ஒப்பித்தல் போட்டியும்.

இந்த விஷயத்தை நாங்கள்அரசியலாக்க விரும்பவில்லை. இந்தியாவில் 22 கோடி முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். நம்நாட்டில் பசுக்களை வெட்ட தடைஇருந்தபோதும் பசுக்கள் வெட்டப்படுகின்றன. விற்பனையும் செய்யப்படுகின்றன. பாஜக ஆளும் மாநிலங்களிலும் இது நடக்கத்தான் செய்கிறது.

அசான் ஒப்பித்தல் போட்டியை ஆன்லைனில் நடத்துவதற்கு ஏதாவது ஒரு முஸ்லிம் அறக்கட்டளை ஏற்பாடு செய்யலாம் என்றுதான் சிவசேனாமூத்த தலைவர் சக்பால் கூறியிருந்தார். பொதுவெளியில் மக்கள் கூடுவதைத் தவிர்ப்பதற்கும், சடங்குகள், திருவிழாக்களை வீடுகளில் இருந்தே டிஜிட்டலில் செய்வதற்கும் இது வகை செய்யும் என்று அவர் கூறியிருந்தார். இதில் அரசியல் எதுவும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்