10 வருடங்களாக தென் மாநிலங்களில் தங்கசெயின்களை பறிக்கும் கும்பல் உ.பி.யில் கைது: அனுப்பி வைத்த நகைக்கடை அதிபர்களும் சிக்கினர்

By ஆர்.ஷபிமுன்னா

கடந்த 10 வருடங்களாக தென் மாநிலங்களில் தங்கசெயின்களை பறிக்கும் கும்பல் உத்திரப்பிரதேசம் நொய்டாவில் கைதாகி உள்ளது. இவர்களை தம் செலவில் அனுப்பி வைத்து பங்கு பெற்று வந்த நகைக்கடை அதிபர் மற்றும் அவரது மகனும் சிக்கியுள்ளனர்.

டெல்லியை ஒட்டியுள்ள நொய்டாவின் செக்டர் 24 இல் போலீஸார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த இருவர் போலீஸாரை கண்டு ஓடத் துவங்கினர்.

இதனால், அவர்களை விரட்டிய நொய்டா காவல்நிலையத்தார் என்கவுண்டர் செய்து பிடித்தனர். இதில் காலில் காயம் அடைந்து இருவரும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் 2 தங்கசெயின், திருடப்பட்ட பல்ஸர் பைக் மற்றும் 2 கள்ளத்துப்பாக்கிகளும் பிடிபட்டன. இதன் விசாரணையில் இருவரும் கடந்த 10 வருடங்களாக தென் மாநிலங்கள், டெல்லி மற்றும் உபியில் தங்கசெயின்கள் பறித்து வந்துள்ளனர்.

இவர்கள் மீது சுமார் 40 வழக்குகள் பதிவாகி உள்ளன. இவற்றில் தெலங்கானாவின் ஹைதராபாத்தில் 12 வழக்குகளும் பதிவாகி இருப்பதையும் அப்பகுதியின் காவல்துறை துணை ஆணையரான சு.இராஜேஷ் தன் விசாரணையில் உறுதி செய்துள்ளார்.

நொய்டாவின் சோர்கா கிராமத்தை சேர்ந்தவர்களில் ஒருவர் பெயர் மோனு. இவருக்கு ராகுல் மற்றும் ரோஹித் என்ற பெயர்களும் உண்டு. மற்றவரான அணில் என்கிற அன்னு கிரேட்டர் நொய்டாவின் காஸ்னா கிராமத்தை சேர்ந்தவர்.

சு.இராஜேஷ்

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் தமிழரான சு.இராஜேஷ் கூறும்போது, ‘இந்த இருவருக்கும் அருகிலுள்ள புலந்த்ஷெஹரின் நகைக்கடை அதிபரான கைலாஷ், அவரது மகனான வேத் பிரகாஷுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது.

திருடப்பட்ட நகைகளை விலைக்கு வாங்கும் இவர் அக்கொள்ளையர்கள் தென்னிந்தியா வரை தனது செலவில் அனுப்பி வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தமிழகத்திலும் இவர்கள் கைவரிசையை காட்டியுள்ளனரா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

திருடப்பட்ட நகைகளில் 60 சதவிகிதம் கொள்ளையர்களுக்கும், 40 சதவிகிதம் நகைகடை அதிபருக்கும் என பங்கு பிரிக்கப்பட்டுள்ளது. தப்பி விட்ட அந்த அதிபரை தேடி வருகிறோம்.’ எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

2 days ago

மேலும்