இந்தியாவில் மலேரியா பாதிப்பு குறைந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள மலேரியா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக மலேரியா அறிக்கை 2020-ஐ, உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது: அதில் கூறியிருப்பதாவது:
* இந்தியாவில் மலேரியா பாதிப்பு கடந்த 2018ம் ஆண்டைவிட, 2019ம் ஆண்டில் 17.6 சதவீதம் குறைந்துள்ளது. அதிக மக்கள் தொகையுள்ள நாடுகளில், மலேரியா பாதிப்பு குறையும் ஒரே நாடு இந்தியா.
* இந்தியாவில் மலேரியா பாதிப்பு ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. 2019ம் ஆண்டு மலேரியா பாதிப்பு 21.27 சதவீதமும், உயிரிழப்பு 20 சதவீதமும் (3,38,494 பாதிப்பு, 77 உயிரிழப்பு) குறைந்துள்ளது.
* 2018ம் ஆண்டில் மலேரியா பாதிப்பு எண்ணிக்கை 4,29,928-ஆகவும், உயிரிழப்பு 96-ஆகவும் இருந்தது.
* 2020ம் ஆண்டில் அக்டோபர் வரை இந்தியாவில் ஏற்பட்ட மொத்த மலேரியா பாதிப்பு 1,57,284. கடந்தாண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 45.02 சதவீதம் குறைவு. கடந்தாண்டு இதே காலத்தில் மலேரியா பாதிப்பு 2,86,091-ஆக இருந்தது.
* இந்தியாவில் மலேரியா ஒழிப்பு நடவடிக்கை, கடந்த 2015ம் ஆண்டு தொடங்கியது. இதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் 2016ல் தீவிரப்படுத்தியது. இதற்காக மலேரியா ஒழிப்பு தேசிய திட்டம் தொடங்கப்பட்டது.
* 2017 முதல் 2022 வரையிலான மலேரிய ஒழிப்புக்கான தேசிய உத்தி திட்டத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது.
* இதன் காரணமாக முதல் 2 ஆண்டுகளுக்கு, உயிரிழப்பு 27.7 சதவீதம் மற்றும் 49.5 சதவீதம் குறைந்தது.
* 2015ம் ஆண்டில் மலேரியா பாதிப்பு 11,69,261ஆகவும், உயிரிழப்பு 385 ஆகவும் இருந்தது.
* ஆனால் 2017ம் ஆண்டில் மலேரியா பாதிப்பு 8,44,558 ஆகவும், உயிரிழப்பு 194 ஆகவும் குறைந்தது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago