132 நாட்களுக்குப்பின் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 4.28 லட்சமாக குறைவு

By செய்திப்பிரிவு

கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, 132 நாட்களுக்குப்பின் 4.28 லட்சமாக குறைந்துள்ளது.

நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 4.28 லட்சமாக (4,28,644) குறைந்துள்ளது. 132 நாட்களுக்குப்பின் இது மிகக் குறைந்த அளவு. இதற்கு முன் கடந்த ஜூலை 23ம் தேதி சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 4,26,167 ஆக இருந்தது.

தினசரி புதிதாக தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கை, கடந்த 3 நாட்களாக சுமார் 30 ஆயிரமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 36,604 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் 43,062 பேர் குணமடைந்துள்ளனர். தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை, தினசரி பாதிப்பு எண்ணிக்கையைவிட கடந்த 5 நாட்களாக அதிகரித்து வருகிறது. குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 89,32,647-ஆக அதிகரித்துள்ளது. இதனால் குணமடைந்தோர் வீதம் 94.03 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 501 பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்