நாட்டின் சர்வதேச எல்லையைப் பாதுகாக்கும் வீரமிக்க சக்தியாக எல்லைப் பாதுகாப்புப் படையினர் திகழ்வதாக எல்லைப் பாதுகாப்புப் படை எழுச்சி தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் படை இந்திய அரசால் 1965ஆம் ஆண்டு இதே நாளில் (டிசம்பர் 1-ல்) உருவாக்கப்பட்டது. இந்திய சர்வதேச எல்லைகளைப் பாதுகாப்பதில் இப்படை முக்கியப் பங்காற்றி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 எல்லைப் பாதுகாப்புப் படை எழுச்சி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதுகுறித்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி கூறியுள்ளதாவது:
''எல்லைப் பாதுகாப்புப் படை எழுச்சி தினத்தின் இந்தச் சிறந்த தருணத்தில் அனைத்து @BSF_India படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகள்.
எல்லைப் பாதுகாப்புப் படையினர் நாட்டின் சர்வதேச எல்லையைப் பாதுகாக்கும் வீரமிக்க சக்தியாக தங்களை வேறுபடுத்திக் காட்டி வருகின்றனர்.
தேசத்தைப் பாதுகாப்பதற்கும், இயற்கைப் பேரழிவுகளின்போது மக்களுக்கு உதவுவதற்கும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் உறுதி பூண்டுள்ளனர். அவர்கள் குறித்து இந்தியா பெருமிதம் கொள்கிறது''.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago