காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது: தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது.

நிவர் புயலைத் தொடர்ந்து புதிய புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில் அந்தப் புயலுக்கு 'புரெவி' புயல் எனப் பெயர் வைக்கப்பட்டது. இந்தநிலையில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்தம், தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்தமாக உருவாகியது.

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. புயலாக மாறவும் வாய்ப்புள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரையை டிசம்பர் 2ம் தேதி கடக்கும் என தெரிகிறது.

அதன்பின்பு மேற்கு நோக்கி நகர்ந்து குமரி முனையை டிசம்பர் 3-ம் தேதி அன்று நெருங்க வாய்ப்புள்ளது. தற்போது திரிகோணமலையில் இருந்து 530 கிமீ தொலைவில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் புயலாக மேலும் வலுவடையும். நாளை மாலை அல்லது இரவில் இலங்கையில் புரெவி புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. தென் தமிழகம், கேரளாவில் அதீத கனமழை பெய்யும்.

இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்