திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதத்தில் ரூ.300 சிறப்பு தரிசனம் மூலம் பக்தர்கள் தரிசிப்பதற்கான டிக்கெட்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைன் மூலம் நேற்று வெளியிட்டது.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம்செய்ய தற்போது அண்டை மாநிலங்களான தமிழகம், புதுவை, கர்நாடகா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வரத் தொடங்கி உள்ளனர். கரோனா நிபந்தனைகள் காரணமாகவும், போக்குவரத்து வசதிகள் தடை செய்யப்பட்டதாலும் இதுவரை ஏழுமலையான் கோயிலுக்கு வெளிமாநில பக்தர்கள்கார்கள் மூலமாக மட்டுமே வந்து சென்றனர்.
ஆனால், தற்போது அண்டை மாநிலங்களில் இருந்து பேருந்து போக்குவரத்தும் தொடங்கி இருப்பதால், பக்தர்கள் அதிகஅளவில் வருகின்றனர். இருந்தபோதிலும்,தேவஸ்தானத்தின் நிபந்தனைப்படி நாளொன்றுக்கு 25 ஆயிரம் பக்தர்கள் வரைமட்டுமே சுவாமியை தரிசிக்க முடியும்.இதில், ஆன்லைன் மூலம் அதிக பக்தர்கள்சுவாமியை தரிசிக்க வருகின்றனர்.
இதனைக் கருத்தில்கொண்டு, நேற்றுமுதல் தினமும் 19 ஆயிரம் ஆன்லைன்டிக்கெட்களை தேவஸ்தானம் இணையதளம் மூலம் வெளியிட தொடங்கியது. இதன் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்துடிசம்பரில் சுவாமியை தரிசிக்கலாம்.
பவுர்ணமி கருட சேவை
ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் இரவு7 மணி முதல் மாட வீதிகளில் பவனிவந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதுவழக்கம். ஆனால், கரோனா பரவலால்கடந்த மார்ச் மாதம் முதல் பவுர்ணமி கருடசேவை நடத்தப்படவில்லை. ஆனால்,தற்போது மாட வீதிகளில் 8 மாதங்களுக்கு பிறகு சுவாமியின் தரிசனத்தை கண்டு பக்தர்கள் வழிபட்டனர்.திருமலையில் நேற்று நடைபெற்ற பவுர்ணமி கருட சேவையின்போது, உற்சவரான மலையப்பர் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago