நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பிபிஇ உடைகள்: ஹர்ஷ் வர்தன் பெருமிதம்

By செய்திப்பிரிவு

இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பிபிஇ உடைகள் தயாராவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

பழைய டெல்லி ரயில் நிலையத்தில் செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து முககவசம் மற்றும் சோப் வழங்கினார் ஹர்ஷ் வர்தன்

பழைய டெல்லி ரயில் நிலையத்தில், செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து பொது மக்களுக்கு முக கவசம் மற்றும் சோப்பு ஆகியவற்றை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தில், நாம் விரைவில் 11 மாதங்களை நிறைவு செய்யவுள்ளோம். அப்போதிருந்து, நம்மை பாதுகாக்கும் விதிமுறைகள், சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளி. நமது மிகப் பெரிய ஆயுதம் முககவசம் மற்றும் கிருமிநாசினி.

இந்த சோப் மற்றும் முககவசம் வழங்கும் பின்னணியில் மிகப் பெரிய தகவல் உள்ளது. அந்த தகவலை பரப்புவதுதான் இதன் நோக்கம். மக்களிடம் பல வித வழிகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு முயற்சிக்கிறது. இவற்றை அமல்படுத்துவதில், சுமை தூக்குபவர்கள், வாடகை கார், ஆட்டோ சங்கங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், முககவசங்கள், பிபிஇ கவச உடைகள், வென்டிலேட்டர்கள் போன்றவற்றின் தயாரிப்பில் இந்தியா தற்சார்பாக உள்ளது. இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பிபிஇ உடைகள் தயாராகின்றன. தடுப்பூசி தயாரிப்பில் நமது விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால், அது சரியான நேரத்தில் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

20 mins ago

இந்தியா

3 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்