கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தில், பரிசோதனை அளவில், 14 கோடி என்ற சாதனை இலக்கை இந்தியா இன்று கடந்தது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 38,772 பேருக்கு மட்டுமே புதிதாக தொற்று ஏற்பட்டது. அதே நேரத்தில் 45,333 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் 6,561 குறைந்துள்ளது. மொத்தம் 4,46,952 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இவர்கள் மொத்த பாதிப்பில் 4.74 சதவீதம்.
குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பால், குணமடைந்தோர் வீதம் 93.81 சதவீதமாக அதிகரித்துள்ளது. குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 88,47,600 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில், கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
» விவசாயிகளை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்புகின்றன: பிரதமர் மோடி கடும் சாடல்
மத்தியப் பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், டெல்லி, ஹரியாணா மற்றும் ராஜஸ்தானில் கடந்த ஒரு மாதத்தில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நாட்டின் கோவிட் பரிசோதனை அளவு இன்று 14 கோடியை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,76,173 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு 15 லட்சம் பரிசோதனைகள் செய்யும் அளவுக்கு இந்தியாவின் திறன் அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 443 பேர் உயிரிழந்தனர். நாட்டின் இறப்பு வீதம் மேலும் குறைந்து 1.45 சதவீதமாகியுள்ளது. ஒரு மில்லியன் பேருக்கு இறப்பு குறைவாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago