விவசாயிகளை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்புகின்றன: பிரதமர் மோடி கடும் சாடல்

By செய்திப்பிரிவு

விவசாயிகளை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்புவதாக பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் மோடி தனது தொகுதியான வாரணாசிக்கு சென்றார். அங்கு பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
ஹாண்டியா - ராஜதலாப் இடையே ரூ.2,447 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 6 வழிச்சாலையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

உத்தரப்பிரதேசத்தில் மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. உத்தரபிரதேசத்தில் உள்கட்டமைப்பு மேம்பாடு அடைந்துள்ளது. மாநிலத்தில் 12 விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

வாரணாசியில் புதிய நெடுஞ்சாலைகள், பாலங்கள். போக்குவரத்து நெரிசல்களைக் குறைக்க சாலைகளை அகலப்படுத்துதல் போன்றவைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

சமீபத்தில், விவசாயிகள் மற்றும் விவசாய உள்கட்டமைப்புகளுக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. வாரணாசியில் சரக்கு மையத்தை நிறுவுவதன் மூலம், இங்குள்ள விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எளிதாக சேமித்து விற்க வசதி கிடைத்துள்ளது.

இதனால் விவசாயிகளின் விளைபொருள்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளையும் சட்டப் பாதுகாப்பையும் அளித்துள்ளன. விவசாயிகளின் நலனுக்காக சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன,இது அவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்கும்.

ஒரு விவசாயி தனது விளைபொருட்களை சிறந்த விலையையும் வசதிகளையும் கொடுப்பவர்களுக்கு நேரடியாக விற்க சுதந்திரம் பெற வேண்டும். சுவாமிநாதன் குழுவு விவசாயிகளுக்கு ஒன்றரை மடங்கு அதிகமான எம்.எஸ்.பி வழங்குவதற்கான வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது.

இந்த வாக்குறுதி விவசாயிகளின் வங்கிக் கணக்கையும் எட்டியுள்ளது. விவசாயிகளின் நலனுக்காக புதிய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த புதிய சட்டங்களின் நன்மைகளை நாம் வரும் நாட்களில் காண்போம், அனுபவிப்போம்.

விவசாயிகளை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்புகின்றன.’’ எனக் கூறினார்.

பின்னர் வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். அவருடன் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் உடன் சென்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்