பிஜு ஜனதா தளக் கட்சியிலிருந்து முன்னாள் அமைச்சர் நீக்கம்: சொத்துக் குவிப்பில் சஸ்பெண்ட் ஆன அதிகாரிக்கு உதவியதாக குற்றச்சாட்டு 

By பிடிஐ

ஒடிசாவில் சொத்துக் குவிப்பில் ஈடுபட்ட வனத்துறை அதிகாரிக்கு உதவியதாக எழுந்த குற்றச்சாட்டில் பிஜு ஜனதா தளத்தின் முன்னாள் அமைச்சர் கட்சியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டுள்ளார்.

ஒடிசாவின் முன்னாள் அமைச்சரும் இந்நாள் கோபால்பூர் எம்எல்ஏவுமான பிரதீப் குமார் பானிகிரஹி, மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஆளும் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) அறிவித்துள்ளது.

இதுகுறித்து பிஜு ஜனதா தளம் கட்சியின் பொதுச் செயலாளர் மனஸ் ரஞ்சன் மங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சட்டப்பேரவை உறுப்பினர் பிரதீப் குமார் பானிகிரஹி இன்று கட்சியிலிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவர் மற்றும் மாநில முதல்வர் நவீன் பட்நாயக் இந்த முடிவை எடுத்து அறிவித்தார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் தடுப்பு விழிப்புணர்வுப் பிரிவு மேற்கொண்ட நடவடிக்கையினால் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் இந்திய வனப்பணி அதிகாரி (ஐ.எஃப்.எஸ்) அபய் காந்த் பதக். அவரது மகனும் அவருக்கு உடந்தையாகச் செயல்பட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபணமான நிலையில், முறையற்ற சொத்து வழக்கில் பெரும் சொத்துகளைக் குவித்த குற்றச்சாட்டும் எழுந்தது. இதன் காரணமாக தந்தை-மகன் இருவருமே கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

சஸ்பெண்ட் செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்ட அதிகாரி மற்றும் அவரது மகன் ஆகியோருடன் பானிகிரஹி தொடர்பில் இருந்ததோடு அவர்களுக்குத் தொடர்ந்து முறைகேடாக உதவிகள் செய்துவந்ததும் தெரியவந்துள்ளது.

அபய் காந்த் பதக்கின் மகன் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களை ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ப்பதாகக் கூறி மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மோசடிச் சம்பவங்களில் ஆகாஷுக்கு பிரதீப் குமார் பானிகிரஹி உதவியதாக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்