காங்கிரஸ் பொருளாளராக பவன் பன்சல் நியமனம் அரசியல் ஆலோசகர் பதவிக்கு முற்றுப்புள்ளி?

By ஆர்.ஷபிமுன்னா

காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அகமது படேலின் மறைவை தொடர்ந்து அவர் வகித்த பதவியில் கட்சியின் மூத்த தலைவர் பவன் குமார் பன்சல் நியமிக் கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேசியப்பொருளாளராகவும் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசக ராகவும் இருந்த அகமது படேல் கடந்த 25-ம் தேதி காலமானார். அப்போது முதல், முக்கியத்துவம் வாய்ந்த பொருளாளர் பதவி அடுத்து யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி நிலவி வந்தது.

இந்நிலையில், கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் பரிந்துரையின் பேரில் இந்தப் பதவியில் முன்னாள் மத்திய அமைச்சர் பவன் குமார் பன்சல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரயில்வே அமைச்சராக இருந்தவர் ஆவார். சண்டிகரின் முன்னாள் எம்.பி.யான பன்சல் தற்போது, கட்சியின் அகில இந்திய செயலாளர் (அலுவலகப் பொறுப்பு) பதவி வகித்து வருகிறார். இப்பதவியில் இருந்த மோதிலால் வோரா மறைவைத் தொடர்ந்து, அவரது பதவி பன்சலுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இப்போது கூடுதல் பொறுப்பாக அகமது படேல் வகித்தபதவியும் அவருக்கு அளிக்கப்பட் டுள்ளது. இதன்மூலம் பன்சலுக்கு கட்சித் தலைமை அளித்துள்ள முக்கியத்துவம் தெரியவந்து உள்ளது.

பன்சலுக்கு இடைக்கால பொறுப்பாகவே பொருளாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் இடைக்கால பொறுப்பில் நியமிக்கப்படும் தலைவர்கள் சில மாதங்களில் அந்தப் பதவிகளில் நிரந்தரமாக் கப்படுவது வழக்கம். இதுபோல் பவன் பன்சலும் பொருளாளர் பதவியில் நிரந்தரமாக்கப்பட வாய்ப்புள்ளது. எனினும், அகமது படேல் வகித்த மற்றொரு முக்கியப் பதவியான அரசியல் ஆலோசகர் பதவிக்கு இனி எவரையும் நியமிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்