கரோனா தொற்றை கண்டறிய புதிய முறை: மருத்துவ ஆராய்ச்சிக் குழு ஒப்புதல்

By செய்திப்பிரிவு

அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுவின் (சி எஸ் ஐ ஆர்) உறுப்பு ஆய்வகமான, ஹைதராபாத்தில் உள்ள செல்கள் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (சி.சி.எம்.பி) உருவாக்கியுள்ள கரோனா தொற்றை கண்டறிவதற்கான புதிய முறைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போதுள்ள தங்க தரச்சான்று பெற்ற ஆர்டி-பிசிஆர் முறையை சற்றே மாறுதலுக்கு உட்படுத்தி செல்கள் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் உருவாக்கியுள்ள நேரடி டிரை ஸ்வாப் (காய்ந்த மூக்கு திரவம்) ஆர்டி-பிசிஆர் சோதனையை தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதை செயல்படுத்துவதன் மூலம் புதிதாக எந்த முதலீடும் செய்யாமல் பரிசோதனைகளின் அளவை 2 முதல் 3 மடங்கு வரை அதிகரிக்கலாம். இதற்கு தேவைப்படும் குறைந்த செலவு மற்றும் நேரத்தை கருத்தில் கொண்டு, இந்த பரிசோதனையை பின்பற்றுவதற்கான அறிவுரையை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு வழங்கியுள்ளது.

ஏப்ரல் 2020 முதல் கரோனா வைரஸ் மாதிரிகளை ஹைதராபாத்தில் உள்ள செல்கள் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் கையாண்டு வருகிறது. தெலங்கானாவில் உள்ள சுகாதாரப் பணியாளர்களோடு நெருங்கி பணிபுரிந்த பிறகு, பரிசோதனையை தாமதமாக்கும் சில விஷயங்களை இம்மையம் கண்டறிந்தது. இதைத் தொடர்ந்து இந்த புதிய முறையை உருவாக்கி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

28 mins ago

இந்தியா

46 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்