கோவிட் நோய் தொற்றுக்கு நாட்டில் தற்போது 4,54,940 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டின் மொத்த பாதிப்பில் இது 4.87 சதவீதம் ஆகும்.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 41,322 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 69.04 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியாணா மற்றும் சட்டீஸ்கர் ஆகிய 8 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 6,185 பேரும், டெல்லியில் 5,482 பேரும், கேரளாவில் 3,966 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 11,57,605 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, இதுவரை மொத்தம் 13.82 கோடி (13,82,20,354) பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
1175 அரசு ஆய்வுக் கூடங்கள் மற்றும் 986 தனியார் ஆய்வகங்கள் உட்பட நாடெங்கிலும் மொத்தமுள்ள 2161 பரிசோதனை மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையான மற்றும் வளர்ச்சியுடன் கூடிய பரிசோதனை உட்கட்டமைப்பு நடவடிக்கைகளின் வாயிலாக பரிசோதனைகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
» இனிமேல் அவர் போன் செய்தால்கூட எடுக்க மாட்டேன்: விவசாயிகள் மீது தாக்குதலால் அமரிந்தர் சிங் காட்டம்
கடந்த 24 மணி நேரத்தில் 41,452 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் நாட்டில் மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 87.59 லட்சமாக (87,59,969) உயர்ந்துள்ளது.
இதன்மூலம் நாட்டில் குணமடைந்தவர்களின் சதவீதம் 93.68-ஆக தற்போது பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 485 பேர் உயிரிழந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago