கர்நாடக முதல்வர் எடியூரப்பாவைமாற்றும் பேச்சுக்கே இடமில்லை: துணை முதல்வர் திட்டவட்டம்

By இரா.வினோத்

பாஜகவில் 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு பொறுப்புகள் வழங்குவதில்லை அல்லது பதவியில் தொடர்வதில்லை என்றஎழுதப்படாத விதி பின்பற்றப் படுகிறது.

இந்நிலையில், கர்நாடக பாஜக மூத்த தலைவர்கள் “கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு 77 வயது ஆகிவிட்டதால் அவரால் முழுமையாக செயல்பட முடியவில்லை. எனவே அவருக்கு பதிலாக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், தற்போதைய‌ துணை முதல்வர் அஷ்வத் நாராயண் உள்ளிட்டோரில் ஒருவரை முதல்வராக நியமிக்க வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ளனர். அமைச்சரவையில் இடம் கிடைக்காத முன்னாள் அமைச்சர்கள் சிலரும் இதே கோரிக்கையை எழுப்பியுள்ளனர்

இதுகுறித்து துணை முதல்வர் அஷ்வத் நாராயண் நேற்று கூறும்போது, “எஞ்சியுள்ள 3 ஆண்டுகளுக்கும் முதல்வர் பதவியில் எடியூரப்பா நீடிப்பார். அவரை மாற்றிவிட்டு, வேறு ஒருவரை முதல்வராக நியமிக்கும் பேச்சுக்கே இடமில்லை. கர்நாடக பாஜகவின் முகம் எடியூரப்பா தான். அவரே எங்கள் அனைவருக்கும் தலைவர். எனவே தேவையற்ற குழப்பத்தை ஊடகங்கள் உருவாக்க வேண்டாம்.

அமைச்சரவை விரிவாக்கம் குறித்து எடியூரப்பாவும் மேலிடத்தலைவர்களும் முடிவு செய்வார்கள். கட்சிக்காக உழைத்தவர் களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படும். இந்த விவகாரத்தில் மூத்த எம்எல்ஏக்கள் பொறுமை காக்க வேண்டும். அனைவரும் ஒன்றுகூடி ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

மேலும்