கோவிட் போராட்டத்தில் ஊடகங்களின் பயணம் முக்கியமானது: ஹர்ஷ் வர்தன் பாராட்டு

By செய்திப்பிரிவு

கோவிட்-19 போராட்ட பயணத்தில், ஊடகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன என ஐஐஎம்சி மாணவர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.

இந்திய வெகுஜன மக்கள் தொடர்பு மையம் (ஐஐஎம்சி) மாணவர்களிடம் காணொலி காட்சி மூலம் உரையாற்றிய டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறியதாவது:

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் ஊடகம், மக்கள் அணுகுமுறையை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால் ஊடகத்தினருக்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது. கோவிட்டுக்கு எதிரான 11 மாத கால பேராட்ட பயணத்தில், மக்களுக்கு கொவிட் தொடர்பான தகவல்களை அளிப்பதில் ஊடகத்தினர் 24 மணி நேரமும் பணியாற்றினார். இந்த பயணத்தில் ஊடகம் முக்கிய பங்காற்றுகிறது. கரோனா முன்கள பணியாளர்கள் பட்டியலில் ஊடகத்தினரையும் சேர்த்துள்ளேன்.

போலியோவுக்கு எதிரான எங்கள் போராட்டத்தில், ஆரோக்கிய இதழியல் மையக் கருவாக இருந்தது. போலியோ பாதித்தவர்களில் 60 சதவீதம் பேர் இந்தியாவில் இருந்தபோது, பத்திரிக்கையாளர்கள் தங்கள் பங்களிப்பின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி போலியோ ஒழிப்பு திட்டத்தை வெற்றியடைச் செய்தனர். அதேபோல் 2025ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிப்பதிலும், ஊடகத்தினரின் பங்களிப்பு இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, தேசிய உடல் உறுப்பு தான தினத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கொண்டாடியது. இதை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பங்கேற்றார்.

உடல் உறுப்பு தானம் குறித்த பிரசாரத்தை மத்திய ஆயதப்படை போலீசார் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி தொடங்கினார். அதன் நிறைவு நாளை முன்னிட்டு மத்திய ஆயுத போலீசார் இடையே டாக்டர் ஹர்ஷ் வர்தன் பேசினார்.

இறப்புக்குப்பின் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக மத்திய ரிசர்வ் போலீசார் 79,572 பேர் உறுதி அளித்தனர். அவர்களுக்கு டாக்டர் ஹர்ஷ் வர்தன் பாராட்டு தெரிவித்தார். உடல் உறுப்பு தானத்தில் இந்தியா உலகளவில் 3வது இடத்தில் உள்ளதாகவும், கடந்த 2019ம் ஆண்டில், 12,666 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்ததாகவும், தமிழகத்தில் 295 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இவற்றில் 76 நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் என்றும், இவற்றில் பெரும்பாலானோர், கொவிட் தொற்றால் தீவிர பாதிப்புக்கு உள்ளானவர்கள் என டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்