கோவிட்-19 தடுப்பூசி தயாரிப்புப் பணிகள் ஆய்வு: பிரதமர் மோடி சனிக்கிழமை புனே வருகை

By பிடிஐ

கோவிட்-19 தடுப்பூசி தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் சீரம் நிறுவனத்தைப் பார்வையிட பிரதமர் மோடி சனிக்கிழமை புனேவுக்கு வருகை தர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவின் சில மாநிலங்களில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து நாட்டின் சராசரித் தொற்றும் உயர்ந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொத்த பாதிப்பு 92,66,706 ஆக அதிகரித்துள்ள நிலையில், கோவிட்-19 தடுப்பூசி குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கரோனா தடுப்பூசிப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவில், கோவிட்-19 தடுப்பூசியைத் தயாரிக்க மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஏழு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அவற்றில் புனேவில் இயங்கிவரும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (SII) மற்றும் ஜெனோவா பயோஃபார்மாசூட்டிகல்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா உலக அளவில் பெரும் அளவில் உற்பத்தி மற்றும் விற்பனை உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனமாகும். கோவிட் -19 தடுப்பூசி தயாரிப்புக்காக, உலகளாவிய மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா இணைந்து செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையில் இந்தத் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆய்வு மேற்கொள்ள வரும் சனிக்கிழமை அன்று பிரதமர் மோடி வருகை தர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியின் வருகை குறித்து புனே பிரதேச ஆணையர் சவுரப் ராவ், பிடிஐயிடம் கூறியதாவது:

"சனிக்கிழமை (நவம்பர் 28) அன்று சீரம் இந்தியா நிறுவனத்திற்கு பிரதமர் மோடியின் வருகை குறித்து எங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அவரது முழுமையான பயணத் திட்டம் இன்னும் பெறப்படவில்லை.

பிரதமரின் புனே வருகை, கரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி தயாரிப்புப் பணிகளை ஆய்வு செய்வதையும், அதன் வெளியீடு, உற்பத்தி மற்றும் விநியோக வழிமுறைகள் பற்றி அறிந்து கொள்வதையும் நோக்கமாகக் கொண்டது.

அதன் பின்னர் டிசம்பர் 4-ம் தேதி, 100 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் மற்றும் ராஜாங்க அதிகாரிகள் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் புனேவில் உள்ள ஜெனோவா பயோஃபார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் நிறுவனங்களைப் பார்வையிடுவார்கள்''.

இவ்வாறு புனே பிரதேச ஆணையர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்