கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச கல்விக்கான மேலாண் இயக்குனர் ராட் ஸ்மித், இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கையை பாராட்டினார்.
மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அரபிந்தோ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த முதலீடு இல்லா அடிப்படை கற்றலை புதிய முறையில் வழங்குவதை ஊக்குவிப்பது தொடர்பான தேசிய கருத்தரங்கை காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
திறமையான தலைமை பண்பிற்காக 40 கல்வி அதிகாரிகளையும், கோவிட்-19 பெருந்தொற்றின்போது புதுமை வழிமுறைகளை பின்பற்றி கற்பித்த 26 ஆசிரியர்களையும் மத்திய அமைச்சர் நிகழ்ச்சியில் கௌரவித்தார்.
மேலும் தொடரின்போது கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்றிய புதுமையான செயல்முறைகள் அடங்கிய மின் புத்தகத்தையும் அவர் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தேசிய கல்வி கொள்கை 2020, நாட்டின் கல்வி வரலாற்றின் விரிவான மற்றும் எதிர் காலத்திற்கு உகந்த ஆவணமாக திகழ்வதாக தெரிவித்தார். குழந்தைகளிடையே போட்டி மனப்பான்மையை ஏற்படுத்தி, திறமை மற்றும் நுண் சிந்தனைத் திறனை வளர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய கல்வி கொள்கை புதிய இந்தியாவுக்கான அடித்தளமாக அமைவதாக அவர் குறிப்பிட்டார்.
உலகின் முன்னணி பல்கலைக்கழகமான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச கல்விக்கான மேலாண் இயக்குனர் ராட் ஸ்மித், இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கையை வெகுவாக பாராட்டியதோடு கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருவதாக பாராட்டுகளைத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
38 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago