கோவிட்-19: கண்காணிப்பு, கட்டுப்பாடு, எச்சரிக்கை: மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல் உத்தரவு வெளியீடு

By செய்திப்பிரிவு

2020 டிசம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை அமலில் இருக்கப்போகும் கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கைக்கான வழிகாட்டுதல்கள் குறித்த உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கோவிட்-19 பாதிப்புகள் நாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், பெருந்தொற்றின் பரவலுக்கு எதிராக அடைந்துள்ள பலன்களை தக்கவைத்துக் கொள்வதே இந்த வழிகாட்டுதல்களின் நோக்கமாகும். சில மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய பண்டிகைக் காலம் மற்றும் குளிர்காலத்தை கருத்தில் கொண்டு பெருந்தொற்றை எதிர்கொள்வதற்காக இந்த வழிகாட்டுதல்கள் வெளியிட்டப்பட்டுள்ளன.

கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு:

* மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு, கட்டுப்பாட்டு பகுதிகள் மாவட்ட அதிகாரிகளால் கவனமுடன் வரையறுக்கப்படுவதை மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் உறுதி செய்ய வேண்டும்.

* இந்தக் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

* இதற்காக அமைக்கப்பட்ட சிறப்புக் குழுக்களின் மூலம் அனைத்து வீடுகளும் கண்காணிக்கப்படும், பரிசோதனைகள் நடத்தப்படும்.

* கோவிட்-19 நோயாளிகள் விரைந்து தனிமைப்படுத்தப்பட்டு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும்.

சரியான கோவிட்-19 நடத்தைமுறை:

* சரியான கோவிட்-19 நடத்தைமுறையை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் உறுதி செய்ய வேண்டும்.

* முகக்கவசங்கள் அணிதல், கைகளை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், சமூக இடைவெளி ஆகியவை கண்காணிக்கப்பட்டு விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றுதல்:

கட்டுப்பாடுப் பகுதிகளுக்கு வெளியே கீழ்கண்ட நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும்

* மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ளவாறு சர்வதேச விமான பயணம்

* 50 சதவீதம் கொள்ளளவுடன் திரையரங்குகள்

* விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக நீச்சல் குளங்கள்

* வர்த்தக நோக்கங்களுக்காக கண்காட்சி அரங்குகள்

* அரங்கத்தின் 50 சதவீத கொள்ளளவுடன், 200 பேருக்கு மிகாமல் சமுக/ஆன்மிக/விளையாட்டு/பொழுதுபோக்கு/கல்வி/கலாச்சார/மதம் சார்ந்த கூட்டங்கள்

பயணக் கட்டுப்பாடுகள்:

மாநிலங்களுக்குள் மற்றும் மாநிலங்களிடையேயான போக்குவரத்துக்கு எவ்வித தடையும் இல்லை. எந்த தனிப்பட்ட அனுமதியும் தேவையில்லை.

ஆரோக்கிய சேது:

ஆரோக்கிய சேது செயலியின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்