கரோனா பரிசோதனை 13.5 கோடியை நெருங்குகிறது

By செய்திப்பிரிவு

இந்தியா கோவிட் பரிசோதனையை கடந்த ஜனவரி மாதம் முதல் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால், தற்போது பரிசோதனை எண்ணிக்கை அதிகளவாக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 11,59,032 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் கோவிட் பரிசோதனையின் மொத்த எண்ணிக்கை 13.5 கோடி (13,48,41,307) ஆக அதிரித்தள்ளது.

கோவிட் பரிசோதனை அதிகரிப்பால், கொவிட் பாதிப்பு வீதமும் குறைந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பு வீதம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த பாதிப்பு வீதம் படிப்படியாக குறைந்து தற்போது 6.84 சதவீதமாக உள்ளது. பரிசோதனை மையங்கள் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டதற்கு இதுவே ஆதாரமாக உள்ளது. தினசரி பாதிப்பு வீதம் இன்று 3.83 சதவீதமாக உள்ளது.

பரிசோதனை மையங்கள் விரிவுபடுத்தப்பட்டது, பரிசோதனை எண்ணிக்கை உயர்வில் முக்கிய பங்காற்றியுள்ளது. நாட்டில் தற்போது 2,138 பரிசோதனை மையங்கள் உள்ளன. இவற்றில் 1167 அரசு மையங்கள், 971 தனியார் மையங்கள்.

இதன் காரணமாக ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கான பரிசோதனை, ஐ.நா கூறிய அளவைவிட இந்தியாவில் 5 மடங்கு அதிகமாக நடக்கிறது.

நாட்டில் தற்போது 4,44,746 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் மொத்த பாதிப்பில் 4.82 சதவீதம்.

குணமடைவோர் வீதம் தொடர்ந்து 93 சதவீதத்துக்கும் மேலாக உள்ளது. இன்று வரை 93.72 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 37, 816 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 86, 42,771 ஆக உள்ளது.

குணமடைந்தோர் மற்றும் சிகிச்சை பெறுபவர்களுக்கு இடையேயான இடைவெளி 81,98,025 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 44,376 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 481 பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்