கரோனா தொற்றை மத்திய அரசு முறையாக கையாளவில்லை: ராகுல் காந்தி புகார்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தொற்றை மத்திய அரசு முறையாக கையாளவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் நேற்று கூறியிருப்பதாவது:

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு முழுமையாக தோல்வி அடைந்துவிட்டது. அரசின் நிர்வாகத் தவறுகளால், இந்தியாவில் இன்று கரோனா பாதிப்புஒரு கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. வைரஸ்காய்ச்சலுக்கு ஆயிரக்கணக் கானோர் பலியாகிவிட்டனர்.

அதேபோல, முறையாக திட்டமிடப்படாத ஊரடங்கால் லட்சக் கணக்கான மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி யாக மாறியுள்ளது.

ஆனால், தனது இந்த தோல்விகளை எல்லாம் பொய்கள் மூலமாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மறைத்துவருகிறது. வெறும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளால் மக்களைஏமாற்ற முயல்கிறது. ஆனால், அரசின் இந்த பொய்யுரைகளை மக்கள் இனி நம்ப மாட்டார்கள்.

இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்