கரோனா பாதிப்பு; தடுப்பு மருந்து பயன்பாடு: மாநில முதல்வர்களுடன் நாளை பிரதமர் ஆலோசனை

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று நிலவரம், தடுப்பு மருந்துகளை எதிர்காலத்தில் பயன்படுத்துவது குறித்து நாளை மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துகிறார்.

காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டம் இரண்டு சுற்றுகளாக நடைபெறவிருக்கிறது.

முதல்சுற்றில் கரோனா தொற்று அதிகமுள்ள மாநில முதல்வர்களுடனும் இரண்டாவது சுற்றில் மற்ற மாநில, யூனியன் பிரதேச முதல்வர்களுடனும் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது கரோனா தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் கரோனா தடுப்பூசி பயன்பாட்டை நடைமுறைப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் அன்றாடம் 30,000 முதல் 47,000 வரை கரோனா தொற்று பதிவாகிறது. ஒட்டுமொத்தமாக 91 லட்சத்தைக் கடந்து பாதிப்பு சென்றுகொண்டிருக்கிறது.

இந்நிலையில், நாளைய ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. பண்டிகை காலம் என்பதால் மக்கள் பொது இடங்களில் அதிகளவில் கூடியதன் காரணமாகவே நிறைய பேருக்கு தொற்று ஏற்பட்டதாக கருதப்படுகிறது.

இந்நிலையில், ஆஸ்ஃபோர்டு ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி வந்த பின்னர் அதனை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் டிசம்பர் 11, 12 தேதிகளில் இங்குள்ள அமெரிக்கர்களுக்கு முதற்கட்டமாக ஆஸ்ஃபோர்டு ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்