கராச்சி ஒரு நாள் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் என்று மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
மும்பை புறநகர்ப் பகுதியான பாந்த்ராவில் உள்ள ‘கராச்சி ஸ்வீட்ஸ்’ என்ற கடையின் பெயருக்கு சிவசேனா தலைவர் நிதின் நந்த்கோக்கர் ஆட்சேபனை தெரிவித்தார்.
‘கராச்சி’ என்ற பெயரைக் கைவிடுமாறும், கராச்சி ஸ்வீட்ஸ் பெயரை மராத்தியில் ஏதோவொன்றாக மாற்றுமாறும் கடையின் உரிமையாளரிடம் நிதின் நந்த்கோக்கர் கேட்டுக்கொண்டார். இது சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது. கடையின் உரிமையாளரை நிதின் மிரட்டுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால், இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த சிவசேனா எம்.பியும் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ராவத், “பெயர் மாற்றத்திற்கான இந்தக் கோரிக்கை கட்சியின் கோரிக்கை அல்ல. ‘கராச்சி ஸ்வீட்ஸ்’ 60 ஆண்டுகளாக இருந்து வருகிறது, இது மும்பை மற்றும் இந்தியாவில் உள்ளது” என்றார்.
» சீன எல்லைப் பிரச்சினையை சமாளிக்க ஊடக தந்திரம் போதாது: மத்திய அரசு மீது ராகுல் காந்தி விமர்சனம்
இப்பிரச்சினை குறித்து பாஜக தலைவரும், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் இன்று ஊடகங்களிடம் கூறியதாவது:
''நாங்கள் அகண்ட பாரதம் (பிரிக்கப்படாத இந்தியா) மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். ஒரு நாள் பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சி இந்தியாவின் ஒரு பகுதியாக மாறும் என்று நாங்கள் நம்புகிறோம். அதற்கான நேரம் நிச்சயம் வரப்போகிறது.
லவ் ஜிஹாத் என்று அழைக்கப்படுவதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் முயற்சியை வரவேற்கிறேன்.''
இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago