இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து கடற்படைகளுக்கு இடையிலான முத்தரப்பு பயிற்சி

By செய்திப்பிரிவு

இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து கடற்படைகளுக்கு இடையிலான முத்தரப்பு பயிற்சி நடைபெற்று வருகிறது. சைட்மெக்ஸ்- 20 (SITEMEX-20) என்று அழைக்கப்படும் இந்த பயிற்சி, அந்தமான் கடற்பகுதியில் 2020 நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் கப்பலான கமோர்டா மற்றும் ஏவுகணை தாங்கிக் கப்பலான கர்முக் ஆகியவை இந்த பயிற்சியில் பங்கு பெறுகின்றன.

முதலாவது சைட்மெக்ஸ் பயிற்சி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போர்ட் பிளேயரில் நடைபெற்றது. இந்தியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே பரஸ்பர தன்னம்பிக்கையை வலுப்படுத்தவும், பொதுவான புரிதலை வளர்க்கவும், கடல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு தேவையான சிறந்த வழிமுறைகளைப் பின்பற்றவும் இந்த பயிற்சி நடத்தப்படுகிறது. இந்த வருடப் பயிற்சியை சிங்கப்பூர் கடற்படை தலைமை ஏற்று நடத்துகிறது.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தொடர்பில்லாத வகையில் கடற்பகுதியில் மட்டுமே இந்த பயிற்சிகள் நடைபெறுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்