ஆக்ராவில் முகக்கவசம் அணியாதவர்கள் கைது: தொடர்ந்து கரோனா அதிகாரிப்பால் போலீஸார் நடவடிக்கை

By ஏஎன்ஐ

கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் முகக்கவசம் அணியாமல் சாலையில் சென்றவர்களை ஆக்ரா போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

உத்தரபிரதேசத்தில் கரோனா பாதிக்கப்பட்ட 23,471 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 7,524 பேர் இந்த நோயால் உயிரிழந்தனர். மாநிலத்தில் இதுவரை 4,93,228 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கரோனா பாதிப்பு குறையத் தொடங்கின. எனினும் சிற்சில இடங்களில் மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரத் தொடங்கியுள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக சில மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் திரும்பப் பெறப்பட்டு கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. ஆக்ராவில் விதிமுறைகளை மீறுவோர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து வட்ட அலுவலர் மகேஷ்குமார் ஏஎன்ஐயிடம் கூறியதாவது:

ஆக்ராவின் மது நகர் சவுராஹா பகுதியில் சாலையில் சென்ற நபர்கள் கோவிட் நெறிமுறைகளை மீறும் வகையில் சிலர் முகக்கவசம் அணியாமல் சென்றனர். அப்போது முகக்கவசம் அணியாத நபர்களை போலீசார் கைது செய்தனர்.

காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்கு முன்பாக, விதிமீறலில் ஈடுபட்டவர்களுக்கு முகக்கவசங்களை போலீஸார் வழங்கினர். பின்னரே அவர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களை எச்சரிக்கை செய்யப்பட்டனர்.

விதிமுறைகளை மீறியவர்களின் பெற்றோர்களையும் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர். முகக்கவசம் இல்லாமல் யாரையும் வெளியே அனுப்ப வேண்டாம் என்று அவர்களிடம் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. அதன்பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

நகரில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் கரோனா பாதிப்பின் தீவிரத்தன்மை குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு வட்ட அலுவலர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்