நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகளை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகளை 2020 நவம்பர் 23 அன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்.
புதுதில்லியில் உள்ள டாக்டர் பி டி மார்க் என்னும் இடத்தில் இந்த குடியிருப்புகள் அமைந்துள்ளன. 80 வருட பழமை வாய்ந்த 8 பங்களாக்கள் புதுப்பிக்கப்பட்டு 76 அடுக்குமாடிக் குடியிருப்புகளாக கட்டப்பட்டுள்ளன.
இந்த குடியிருப்பு கட்டுமானப் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியைவிட 14 சதவீதம் குறைவாகவே செலவாகியுள்ளது. கொவிட்-19 பெருந்தொற்றினால் பணிகள் பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய காலத்தில் இவை கட்டப்பட்டுள்ளன.
» தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
» இந்தியாவில் கரோனா பாதிப்பு 91 லட்சத்தை நெருங்கியது: குணமடைந்தோர் எண்ணிக்கை 85 லட்சத்தைக் கடந்தது
சாம்பல் மற்றும் கட்டுமானக் கழிவுகளிலிருந்து செய்யப்பட்ட செங்கற்கள், வெப்பத்தில் இருந்து காக்கும் மற்றும் எரிசக்தியை சேமிக்கும் சிறப்பு ஜன்னல்கள், எல்இடி விளக்குகள், குறைந்த எரிசக்தியில் இயங்கும் குளிர்சாதனப் பெட்டிகள், தண்ணீரை சேமிப்பதற்கான வசதிகள், மழைநீர் சேகரிப்பு மற்றும் கூரையில் சூரிய ஒளி சக்தி கருவி போன்றவை பொருத்தப்பட்ட பசுமைக் கட்டிடமாக இது விளங்கும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago