ஜம்மு காஷ்மீரின் நாக்ரோட்டா பகுதியில் நேற்று முன்தினம் 4 ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்ற நிலையில், பாகிஸ்தான் தூதருக்கு சம்மன் அனுப்பி, மத்திய அரசு இன்று கடும் எதிர்ப்பை பதிவு செய்தது.
நக்ரோட்டா மாவட்டத்தில் ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பான் சுங்கச்சாவடி பகுதியில் போலீஸாரும், சிஆர்பிஎஃப், ராணுவ வீரர்கள் இணைந்து கண்காணிப்புப் பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு காரில் வந்த தீவிரவாதிகளை போலீஸார் விசாரிக்க முயன்றபோது திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர்.
இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் காரில் இருந்த 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளிடம் இருந்து ஏ.கே. 47 ரகத்தைச் சேர்ந்த 11 தானியங்கி துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜம்மு காஷ்மீரில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அமைதியை குலைக்கும் நோக்கில் பெரிய தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் போட்டிருந்த சதித்திட்டத்தை பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஸ் இ முகமது தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து அந்நாட்டு தூதருக்கு சம்மன் அனுப்பிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது
நக்ரோட்டா தீவிரவாதி தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இதன் மூலம் திட்டமிட்டு மிகப்பெரிய தாக்குதலை நடத்தி ஜம்மு காஷ்மீர் அமைதியைகெடுக்கும் நோக்கில் தீவிரவாதிகள் வந்துள்ளார்கள். அதிலும் குறிப்பாக மாவட்டமேம்பாட்டு கவுன்சில் தேர்தலைக் குலைக்கும் நோக்கில் தீவிரவாதிகள் வந்துள்ளனர்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் பாகிஸ்தான் தூதருக்கு சம்மன் அனுப்பி தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக கடும் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது. தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவைப் பாதுகாக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் உறுதியாக இந்தியா எடுக்கும்
தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பது, தங்களின் எல்லையில் தீவிரவாதிகளை செயல்பட அனுமதிப்பது, மற்ற நாடுகள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற கொள்கைகளை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது
. தங்கள் நாட்டு எல்லையில் தீவிரவாதிகளையும், தீவிரவாதச் செயல்களையும் இந்தியாவுக்கு எதிராக அனுமதிக்கக்கூடாது என்று நீண்ட காலமாக சர்வதேச அமைப்புகளும், நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
48 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago