கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா மற்றொரு மைல்கல்லைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,66,022 பரிசோதனைகள் செய்யப்பட்டதன் மூலம் இந்தியாவில் மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 13,06,57,808 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒரு கோடி பரிசோதனைகள் கடந்த 10 நாட்களில் செய்யப்பட்டுள்ளன.
நாளொன்றுக்கு பத்து லட்சத்திற்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுவதால் நோய் தொற்றின் தாக்கம் பெருமளவில் குறைந்துள்ளது. நாட்டில் தற்போது 7 சதவீதத்திற்கும் குறைவானோர் (6.93 சதவீதம் பேர்) இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கொவிட் நோய் தொற்றினால் 46,232 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் நோயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் நோயைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவில் தற்போது மொத்தம் 4,39,747 பேர் கரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நாட்டின் மொத்த பாதிப்பில் 4.86 சதவீதமாகும். கடந்த 24 மணி நேரத்தில் 49,715 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் நாட்டில் மொத்தம் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 84,78,124 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நோயினால் குணமடைந்தவர்களின் விகிதம் 93.67 சதவீதமாகும். நோயினால் குணமடைந்தோர் மற்றும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இடையேயான இடைவெளி 80,38,377 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 564 பேர் நோய் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago